அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/23/17

குழந்தை மனசு ..Joy

குழந்தை மனசு ..Joy 
=====================
லூயிஸ் 
========
எங்க ஆலயத்தின் பாடகர் குழு மாஸ்டரின் மகன் ..தந்தை வெஸ்ட் இண்டீஸ் தாய் பிரித்தானியர் இவர்களுக்கு பிறந்த 5 வது மகன் ..இவனுக்கு இப்போ 4 வயது ..நல்ல கொழுக் மொழுக் பாப்பா ..
இயல்பாகவே இந்த வயது குழந்தைகளின் குறும்பு மும்மடங்கு அதிகமாக இருக்கும் இவனிடம் :) ஆலயத்தில் சர்வீஸ் sermon நடக்கும்போது ஓடுவதும் விளையாடுவதும் குதித்து செல்வதுமாக இருப்பான் ..அதனால் ஆலயத்துக்கு வரும் பெரும்பான்மை தாத்தா பாட்டிகளுக்கு இவனை அறவே பிடிக்காது ..எந்நேரமும் ..கீப் கொயட் ,நோ டிஸிப்ளின் அட் ஆல்  என்று அவனை திட்டிக்கொண்டே இருப்பார்கள் ..எனக்கு பாவமாக இருக்கும் ..அதற்கு முன் ஒரு விஷயம் சொல்லிடணும் இந்த ஊர் பிள்ளைங்களை அடக்குவதென்பது மிக கடினம் ..எந்த நாட்டிலும் நான் பார்க்காத ஒன்றை இங்கே இங்கிலாந் தில் மட்டுமே பார்க்கிறேன் அது child leash போட்டு குழந்தைகளை நடத்தி கூட்டிப்போவாங்க .

எங்க வீட்ல ஊர்ல நாய் தான் அப்படி கூட்டிப்போயிருக்கோம் .. எனக்கு மிக பாவமா இருக்கும் பிள்ளைகளை பார்க்கும்போது ..அப்படிதான் 2 வயது வரை லூயிஸும் வந்தான் ஆலயத்துக்கு ..கிருஷ்ணரை உரலில் கட்டி வச்ச மாதிரி லீஷின் மறுமுனை அம்மா அப்பா கையில் இருக்கும் ..கொஞ்சம் தூரம் நகரும்போது இழுப்பாங்க மேலும் நகராதபடிக்கு ..
..மூன்று வயதுக்குப்பின் லூயிஸின் லீஷ் காணாமற்போனது :)
அதனால் பட்டாம்பூச்சி மாதிரி துள்ளி குதிச்சி ஓடுவான் எங்கும் ..
வெள்ளிக்கிழமைகளில் பாட்டு  பிராக்டிஸ் சமயம் ரொம்ப சத்தம் போடுவான் அவங்கப்பா திட்டினா எதிர்த்து பேசுவான் உரக்க கத்துவான் ..எனக்கு பாவமாக இருக்கும் ..சரி அவனை அமைதியா வைக்க ஏதாச்சும் செய்வோம்னு தெரியாம ஒரு விஷயம் செஞ்சுட்டேன் ..அது ஒரு ஸ்னோ மான் Olaf  காரக்டரை காகிதத்தில் வரைந்தேன் ..அவ்வளவுதான் அப்படியே நேரே என் பக்கம் வந்து விட்டான் :)வாராவாரம் எனக்கு காகிதத்தில் எழுதி தருவான் சில கார்ட்டூன் காரெக்டர்ஸை அவற்றை நான் பென்சிலால் வரைய வேண்டுமாம் .

ஒரு முறை அவன் அப்பாவின் மிக முக்கியமான மியூசிக் நோட் ஷீட்ஸ் அள்ளிக்கிட்டு வந்துட்டான் அவன் அப்பா  அலறி ஓடி வந்தார் ஏஞ்சலின்  முக்கியமான நோட்ஸ் காணவில்லை லூயிஸ் எடுத்து வந்தானா   படம் வரைய என கேட்டார் ...இப்படி மை லிட்டில் போனி ,சின்ட்ரெல்லா ,ஸ்னோ ஒயிட் அப்புறம் frozen காரக்ட்டர்ஸ் பார்பி காரக்டர்ஸ் என பெரிய லிஸ்ட் ஹோம் ஒர்க்காக  வரும் ....நானும் மறவாமல் வரைந்து எடுத்து செல்வேன் அவனுக்கு..இப்போ ரொம்ப நெருக்கமாகிட்டான் லூயிஸ் என்னுடன் ..பார்த்தவுடன் ஓடி வந்து மடியில் அமர்வான் ..கேள்வி கணைகள் தொடரும் :) பச்சக்குன்னு எச்சில் பதிய முத்தம் தருவான் :)

உனக்கு திருமணமாகிவிட்டதா ?உன்னருகில் அமர்கிறார் அவர் உனது boy friend ஆ .நான் இல்லை கணவர் என்றேன் ..உடனே கேட்பான் அப்போ எங்கே உனது மோதிரம் ?நான் சொல்வேன் வீட்டில் பத்திரமா வைத்துள்ளேன் என ..
உனது காதில் கம்மல் எப்படி வந்தது .இந்தியர்கள் சல்வார் மட்டுமே அணிகிறாரகள் நீ மட்டுமேன் ஜீன்ஸ் அணிகிறாய் !!
தலைமுடியை எதற்கு போனி டெய்லாக கட்டுகிறாய் ? நீ இன்டியன் என்றால் உனக்கேன் பஞ்சாபி தெரியலை ..உன் மேல் இந்தியன் வாசனை இல்லை ?? (இந்தியர்கள் கோட்/ஜாக்கெட்  குழம்பு வாசனையுடன் வலம்  வருவார் இங்கே) 
ஸப்ப்பா :) எப்படியெல்லாம் யோசிக்கறாங்க பிள்ளைங்க ..:)

பிறகு திடீரென உன் பெயர் joy என மாற்றியாச்சு இனிமே உன்னை ஜாய் என்றுதான் அழைப்போம் அத்துடன் உன் செர் நேம் குடும்பப்பெயரும் தாம்சன் இனிமே நீ எங்க வீட்டுக்கே வந்துடலாம் நீயும் என்னை மாதிரி தாம்சன் குடும்பத்தை சேர்ந்தவள் என்று அன்றுமுதல் என் பேரையே மாற்றிட்டான்... .என்னை பார்த்தவுடன் ஓடி வந்து கட்டிப்பிடிப்பதும் சந்தோஷத்தில் கத்துவதும் இந்த ஆலயத்துக்கு வரும்  வயதானோருக்கு பிடிக்காது :)இப்போதெல்லாம் என்னையும் சேர்த்தே முறைக்கிறார்கள் :)) ஹாஹா ..
ஜாய் என்று பெயர் மாற்ற காரணம் என்னை காணும்போது அவனுக்கு சந்தோஷமாக இருக்கிறதாம் அதனால் ஜாய் என்று பெயர் மாற்றினானாம் ..
போன வாரம் அவனது அட்டகாசம் தாங்க முடியாம கொயர் பிராக்டிஸ்   நேரம் அவனது அப்பா அடித்து விட்டார் ..சில நிமிடம் தனியே உக்காந்து அழுது கொண்டிருந்தான் பிறகு நேரே வந்து என்னை அணைத்து துக்கத்தை இளைப்பாறி இறக்கி வைத்து  விட்டு சென்றான் ..ஆச்சர்யம் என்னவென்றால் அங்கே அவனது அக்கா அத்தை மற்ற கசின்ஸ் அனைவரும் இருந்தும் அக்குழந்தை என்னை தேடி வந்து அன்பாய் அணைத்தது ..அதுதான் குழந்தை மனசு ....குழந்தைகளாகவே இருப்பது நல்லது அல்லது நாமும் குழந்தைகளாக மாறிவிடுவதும்  நல்லது ..

மீண்டும் சந்திப்போம் .....