அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

9/28/14

Loud ஸ்பீக்கர் ..3 !! :) க்வில்லிங் மற்றும் பீச் பக்கம்

ஸ்பீக்கர் ..3 !! :)
பள்ளி விடுமுறை விட்டதும்  பல இடங்களுக்கு சென்று வந்தோம் 
முதலில் brighton பகுதி பீச்சுக்கு சென்றோம் .அந்த கடற்கரை 
முழுதும் மணல் இல்லாமல் வெறுமனே கூழாங்கற்கள் நிறைந்து காணப்பட்டது .
அதுவும் ஒவ்வொன்றும் அடிச்சா மரண அடிதான் :)


                     இந்த ராட்டினத்தை கண்ணால் பார்த்ததற்கே இன்னும் 
                                            எனக்கு மயக்கம் தெளியலை :))
                                                                                        

                                                                                     
   அந்த கூழாங் கற்களில் என் கண்ணுக்கு பட்டு அங்கிருந்து 
எடுத்து வந்தேன் !!பாருங்கள் இவற்றை 
மனித முகம் வரைந்தார்போன்று இருக்கு ஒன்றில் 


                             மற்றும் ஒரு பெரிய மீன் அல்லது படகு வடிவம் 
அச்சில் வார்த்தார்போலவும் இருக்கு இன்னொன்றில் !
                                                                                

----------------------------------------------------
இது எங்க ஜெஸியின் வெட்னரி டாக்டருக்கு செய்த 
தாங்க்யூ கார்ட் ..

இங்குள்ள கால்நடை ,வெட்னரி மருத்துவர்கள் தங்கள் 
pet பேஷன்டுகளிடம் மிக மிக அன்பா நடந்துக்குவாங்க 1
ட்ரீட்மென்ட் கொண்டு போனா அதுங்களை கட்டி பிடிச்சி 
அரவணைத்து !!ஒரே முத்த மழை பாசமழைதான் :)
நமது மருத்துவர்கள் கவனிக்க வேண்டியது !!
பாசமழையை  மட்டும் தான் சொன்னேன் :))))
சமீபத்தில் ஜெஸ்ஸிக்கு நாங்க மைக்ரோ சிப்பிங் 
தகடு பொருத்தினோம் .microchipping என்பது ஒரு 
வளர்ப்புபிராணி காணாமல் போனால் அதை எளிதில் ட்ரேஸ் 
செய்து கண்டுபிடிக்க உதவும் மேலும் அவங்க கொடுக்கும் ஒரு 
சிறு டாலர் போன்ற பிளாஸ்டிக்கையும் பிராணிகளின் 
கழுத்துபட்டையில் இணைத்துவிட  வேண்டும் ..
நான் ஜெஸ்ஸி கலர் இருக்குமாறு ஒரு பூஸ் வாழ்த்து அட்டை 
செய்தேன் .வாழ்த்து அட்டையில் ஜெஸியின் கையொப்பம் 
போட்டாகணுமே :) அவளுக்குபதில் நான் போட முடியாது :)
எப்படி கையெழுத்தை வாங்குவதென்று யோசித்து 
செய்தது இது :)

இங்க் அல்லது ஸ்டாம்ப் எதுவுமே இரசாயனம் கலந்திருக்கும் 
அதனால் தோட்டத்துக்கு சென்று கீழே விழுந்திருந்த பல வண்ண 
மலர்களை எடுத்து ஒரு  தட்டில் வைத்து நசுக்கினேன் 
ஒரு கலவையாக அடர் சிவப்பு நிறம் கிடைத்தது .
ஜெஸ்ஸி மேடம் கிட்ட சைன்  பண்ண சொன்னா ரொம்ப பிகு பண்ணிக்கிட்டாங்க :) ஒரு மாதிரி காலை  புடிச்சி கால்நாட்டு வாங்கி விட்டேன் .
இந்த மலர் இதழ்களை இரண்டு காகிதங்கள் இடையில் வைத்து 
பூரி கட்டையில் உருட்டினாலும் அல்லது wax காதிதத்தின் இடையில் 
வைத்து அயர்ன் செய்தாலும் அழகிய அச்சு கிடைக்கும் 
செய்து பாருங்களேன் இந்த சுட்டியில் பார்த்து 
மற்றும் இங்கும் 
..............................
.